Friday, October 30, 2009

காக்டெயில்மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடைசியாக நடித்த படம் “தி இஸ் இட்”. இப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
உலகம் முழுவதும் ஒருநாளில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.35 கோடியே 20 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.63 கோடியே 50 லட்சமும், பிரான்சில் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கும் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

2. ப்ரீபெய்டு மொபைல்களுக்கு புதிய இணைப்பு வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி தப்பிப்பதை தடுப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்டு மொபைல் இணைப்பு பெறுவதும், ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை செய்வதும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது.

3 . இந்தோனேஷியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியுள்ளது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த டீலுக்கான தொகை முழுவதும் பங்குகளாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கத்திலிருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் துவக்க உள்ளதாக இந்தியா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது.அதன்பிறகு மாதம் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் டன் ஒன்று 83 டாலர் எனும் விலையில் 60 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தது இந்தியா சிமெண்ட்ஸ். மீதியை இந்தியாவில் உள்ள சிங்கரேணியிலிருந்து பெற்றது. இந்த ஆண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் திட்டமிட்டுள்ள முதலீட்டுச் செலவு ரூ.1500 கோடி. இதில் இதுவரை ரூ.530 கோடி செலவிடப்பட்டுள்ளது.

4. இந்த படத்தை பாருங்க ; என்ன தோணுது ....
5 . "குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், காந்திநகரில் உள்ள அரசு வீட்டில் தனியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்' என, அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி:ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கடந்த புதனன்று இரவு ஆமதாபாத் திரும்பினார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளான காய்ச்சல், இருமல் ஆகியவை நேற்று முன்தினம் தென்பட்டன. அவர் தானாகவே, எச்என்1 வைரஸ் பரிசோதனை செய்ய சொன்னார். பின் அவர், அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். மாலையில் அவருக்கு காய்ச்சல் அதிகமாகவே, இரண்டு நாட்களுக்கு தன் அரசு பணிகளை ரத்து செய்தார்.

அன்றிரவு, அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஒரு வாரம் ஓய்வெடுப்பதுடன், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனியாக இருக்குமாறு ஆலோசனை வழங்கினர்.எனவே, அனைத்து மருத்துவ வசதிகளும் அரசு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்கள் அதுல் பட்டேல், கமலேஷ் உபாத்யாயா, ஆர்.கே.பட்டேல் மற்றும் பரேஷ் வோரா ஆகியோர் அடங்கிய குழுவினர், முதல்வருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.முதல்வரின் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


எப்ப‌டி இருந்த‌ நீங்க‌ இப்ப‌டி ஆயிட்டீங்க‌ளே ...

காமன் வெல்த்காமன் மேனை பத்தி ... ஓ .. ஒ .. சாரி காமன் வெல்த் போட்டிகள் மிக சிறப்பாக தொடங்கி உள்ளன .
டில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான "கவுன்ட்-டவுண்' ஆரம்பமானது. லண்டனில் நேற்று நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் காமன் வெல்த் ஜோதியை இரண்டாம் ராணி எலிசபெத், நமது ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் வழங்கினார். இந்த ஜோதி, தொடர் ஓட்டமாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட உள்ளது.

டில்லியில் வரும் 2010, அக்., 3-14ம் தேதி வரை 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்கான பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதாக சர்ச்சை எழுந்தது. இத்தகைய பிரச்னைகளை கடந்து நேற்று லண்டனில் காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.ஒலிம்பிக் ஜோதியின் வரலாற்றை பார்க்கும் போதே ;ஒலிம்பிக் ஜோதியை போன்ற காமன்வெல்த் ஜோதி பாரம்பரிய முறைப்படி வழங்கப்படும். "ராணியின் பேட்டன்' என்று அழைக்கப்படும் இந்த ஜோதியில் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணி, வீரர்களுக்கு வழங்கும் செய்தி இடம் பெறும். இது துவக்க விழாவின் போது வாசிக்கப்படும். டில்லி போட்டிக்கான ஜோதி நவீன தொழில் நுட்பத்துடன் தங்கம் மற்றும் அலுமினியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜோதி இருக்கும் இடத்தை தெரிவிக்கும் கருவிகள் மற்றும் கேமரா பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் படங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். எஸ்.எம்.எஸ்., பெறும் வசதியும் உண்டு. ரசிகர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., களை ஜோதியில் காண முடியும். ராணி வழங்கும் செய்தி 18 கேரட் தங்கத்திலான பழங்கால ஓலைச் சுவடி மாதிரியில் பொறிக்கப் பட்டுள்ளது. மைக்கேல் பாலி என்பவர் வடிவமைத்துள்ளார். டைட்டன் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல், இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் ஜோதியை வழங்கினார். அதில் வீரர்களுக்கான தனது செய்தியை வைத்தவுடன், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அளித்தார்.பின்னர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ். கில்லிடம், ஜனாதிபதி வழங்கினார். அவர், அதனை காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவரான சுரேஷ் கல்மாடியிடம் வழங்கினார். கல்மாடியிடம் இருந்து ஒலிம்பிக் "தங்க நாயகன்' அபினவ் பிந்த்ரா பெற்றார். இவர் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.பின்னர் கபில்தேவ், சானியா மிர்சா, மில்கா சிங், விஜேந்தர் உள்ளிட்ட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் ஜோதியை பெற்று, ஓடினர். சுமார் 340 நாட்களில் 2 லட்சம் கி.மீ., தூரத்துக்கு ஜோதி பயணம் செய்ய உள்ளது. போட்டி துவங்குவதற்கு 100 நாட்கள் இருக்கும் போது வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடையும். பின் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும். 2010, அக்., 3ம் தேதி நடக்கும் துவக்க விழாவின் போது டில்லி வந்து சேரும்.நேற்று ஜோதி ஓட்டம் துவங்குவதற்கு முன் கலைஞர்களின் வண்ணமயமான நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் ரிக் வேதத்தில் இருந்து சமஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரித்தனர். பரத நாட்டியம், குச்சிபிடி, கிராமிய நடனம், பஞ்சாப் பங்க்ரா, டான்டியா போன்ற நடனங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபலித்தன. ஒட்டுமொத்தமாக பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் "மினி இந்தியாவை' பார்க்க முடிந்தது.

Wednesday, October 28, 2009

அறிமுக நாயகன்

அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களே !!

ஆருயிர் வலையுலக சிந்தனை சிற்பிகளே !!

இனிமேலும் வாசகனாய் இல்லாமல்

ஈடு இணையற்ற உங்கள் அன்பை பெற !!

உங்கள் முன் வந்திருக்கும் எனக்கு

ஊக்கமும் ஆக்கமும் அளித்து

என்னையும் உங்க‌ள் கூட்ட‌த்தில் சேர்த்த‌

ஏக‌ இறைவ‌னுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ சொல்லி ,

ஐய‌ம் ஏற்ப‌டாம‌ல் என‌க்கு ப‌ல‌ உத்திக‌ளையும் சொல்லி த‌ந்து , நான்

ஒரு சகாப்த‌ம் ப‌டைக்க‌ என‌க்கு

ஓர் அவா .


இப்ப‌டிக்கு

உங்க‌ள் க‌ட்ட‌பொம்ம‌ன் .