Friday, October 30, 2009

காக்டெயில்மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடைசியாக நடித்த படம் “தி இஸ் இட்”. இப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
உலகம் முழுவதும் ஒருநாளில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.35 கோடியே 20 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.63 கோடியே 50 லட்சமும், பிரான்சில் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கும் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

2. ப்ரீபெய்டு மொபைல்களுக்கு புதிய இணைப்பு வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி தப்பிப்பதை தடுப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்டு மொபைல் இணைப்பு பெறுவதும், ப்ரீபெய்டு சிம்கார்டு விற்பனை செய்வதும் நவம்பர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் தெரிவித்துள்ளது.

3 . இந்தோனேஷியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியுள்ளது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த டீலுக்கான தொகை முழுவதும் பங்குகளாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கத்திலிருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் துவக்க உள்ளதாக இந்தியா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது.அதன்பிறகு மாதம் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் டன் ஒன்று 83 டாலர் எனும் விலையில் 60 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தது இந்தியா சிமெண்ட்ஸ். மீதியை இந்தியாவில் உள்ள சிங்கரேணியிலிருந்து பெற்றது. இந்த ஆண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் திட்டமிட்டுள்ள முதலீட்டுச் செலவு ரூ.1500 கோடி. இதில் இதுவரை ரூ.530 கோடி செலவிடப்பட்டுள்ளது.

4. இந்த படத்தை பாருங்க ; என்ன தோணுது ....
5 . "குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், காந்திநகரில் உள்ள அரசு வீட்டில் தனியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்' என, அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி:ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கடந்த புதனன்று இரவு ஆமதாபாத் திரும்பினார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளான காய்ச்சல், இருமல் ஆகியவை நேற்று முன்தினம் தென்பட்டன. அவர் தானாகவே, எச்என்1 வைரஸ் பரிசோதனை செய்ய சொன்னார். பின் அவர், அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். மாலையில் அவருக்கு காய்ச்சல் அதிகமாகவே, இரண்டு நாட்களுக்கு தன் அரசு பணிகளை ரத்து செய்தார்.

அன்றிரவு, அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஒரு வாரம் ஓய்வெடுப்பதுடன், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனியாக இருக்குமாறு ஆலோசனை வழங்கினர்.எனவே, அனைத்து மருத்துவ வசதிகளும் அரசு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர்கள் அதுல் பட்டேல், கமலேஷ் உபாத்யாயா, ஆர்.கே.பட்டேல் மற்றும் பரேஷ் வோரா ஆகியோர் அடங்கிய குழுவினர், முதல்வருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.முதல்வரின் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


எப்ப‌டி இருந்த‌ நீங்க‌ இப்ப‌டி ஆயிட்டீங்க‌ளே ...

3 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றாக இருக்கிறது நண்பரே.., தமிழ்மணம்,தமிழிஷில் சேர்த்துவிடுங்கள்..,

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான ஜுஸ்

அக்பர் said...

நல்ல கலக்குறங்கையா காக்டையில்.

சுவை அருமை.